2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு குடும்பமும் 20,467 ரூபா வற் வரி செலுத்த வேண்டும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாராம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அதுக்கோரல தெரிவித்துள்ளார்.
15 வீதமாக இருக்கும் வற் வரியை 18 வீதமாக அதிகரிக்கும் வரி திருத்தச்சட்டம் இவ்வாரம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வற் வரி அதிகரிப்பின் மூலம் பொருட்கள், சேவைகளின் விலைகள் பாரிய அளவில் உயர்வடையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள், எரிவாயும் உட்பட பல்வேறு மட்டத்தில் இதன் தாக்கம் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கம் எதிர்பார்க்கும் வரி வருமான இலக்கை அடைந்துக்கொள்ள ஒவ்வொரு குடும்பத்திடமும் இருந்து மாதாந்தம் 20,467 ரூபாவை வரியாக அறவிட வேண்டும் என பேராசிரியர் வசந்த அதுக்கோரல தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2024ஆம் ஆண்டு இறுதியில் ஒவ்வொரு குடும்பமும் 245,604 ரூபாவை வரியாக செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வற் வரி அதிகரிப்பின் மூலம் பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் ஒருவேளை அல்லது இரண்டு வேளை உணவுகளை மாத்திரமே தினமும் எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். வற் வரி அதிகரிப்பு நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பங்களை பாரியளவில் பாதிக்கும் எனவும் பொருளாதார நிபுணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.