போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான ‘யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை அரசாங்கம் சுவீகரிக்கும் வகையில் பொலிஸ் சட்டப் பிரிவின் ஊடாக பொலிஸ் சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, களுத்துறை வடக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கான சீருடைகளை தைக்கும் தொழிலை நடாத்திவரும் நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை – பனாபிட்டிய பகுதியில் வைத்து களுத்துறை பிரதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.