உலக மக்கள் தொகை 8 பில்லியனை எட்டுகிறது: இந்த ஆண்டு 75 மில்லியன் அதிகரிப்பு

0
109
Article Top Ad

உலக மக்கள் தொகை 2023ஆம் ஆண்டில் 75 மில்லியன் அதிகரித்துள்ளதுடன் புத்தாண்டு தினத்தில் அது 8 பில்லியனை தாண்டும் என அதிகமாக இருக்கும் என அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் உலகளாவிய சனத் தொகை வளர்ச்சி விகிதம் 1% க்கும் குறைவாகவே இருந்தது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நொடியும் உலகளவில் 4.3 பிறப்புகளும் இரண்டு இறப்புகளும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 0.53% ஆக இருந்துள்ளது. இது உலகளாவிய வளர்ச்சி விகத்துடன் ஒப்பிடுகையில் அரைவாசியாகும். இவ்வாண்டு 1.7 மில்லியன் மக்கள் தொகை வளர்ச்சியுடன் சேர்த்தது புத்தாண்டு தினத்தில் 335.8 மில்லியன் மக்கள் தொகையை அமெரிக்கா கொண்டிருக்கும்.

தற்போதைய வேகத்தில் சனத்தொகை வளர்ச்சி தொடர்ந்தால் 2020 – 20230 இற்கு இடைப்பட்ட தசாப்தம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் மெதுவாக சனத்தொகை வளரச்சியடைந்த தசாப்தமாக இருக்கலாம்.

2020 முதல் 2030 வரையிலான 10 ஆண்டு காலப்பகுதியில் 4% க்கும் குறைவான வளர்ச்சி விகிதத்தையே அமெரிக்க கொண்டிருக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வாளர் வில்லியம் ஃப்ரே கணித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு ஒன்பது வினாடிகளுக்கும் ஒரு பிறப்பு மற்றும் ஒவ்வொரு 9.5 வினாடிகளுக்கு ஒரு இறப்பும் அமெரிக்காவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிய குடியேற்றங்கள் அமெரிக்காவில் மக்கள் தொகையை குறையாமல் தடுக்கும்.

சர்வதேச இடம்பெயர்வு ஒவ்வொரு 28.3 வினாடிகளுக்கும் ஒரு நபரை அமெரிக்க மக்கள் தொகையில் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறப்பு, இறப்பு மற்றும் நிகர சர்வதேச இடம்பெயர்வு ஆகியவற்றின் இந்த கலவையானது ஒவ்வொரு 24.2 வினாடிகளுக்கும் ஒரு நபர் அமெரிக்க மக்கள் தொகையில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.