நியூசிலாந்தில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம்: அமைச்சரவையில் அங்கீகாரம்

0
108
Article Top Ad

நியூசிலாந்தின் டெலிங்டன் நகரில் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதற்கான யோசனையை நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்துள்ளார்.

யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன, இன்று நடைபெற்ற ஊடகச்சந்திப்பில் தெரிவித்தார்.