ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்களாகிய பொன்மாஸ்டர், அருண்மதி, ஜெகன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, நல்லிணக்க நாடகம் போடாதே, தென்னகோனை கைது செய், மக்களின் வாழ்கையினை அழிக்காதே, கைதுசெய்தவர்களை விடுதலை செய், ஜனநாயக போராட்டத்தினை தடுத்து நிறுத்தததே என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து யாழ். மாவட்ட செயலக வளாகம் பகுதிகளில் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதியில் பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்தில் இன்று மாலை 3 மணிமுதல் 5.30 வரை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளார்.