லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹெஸ்பொல்லாவின் முக்கிய தளபதி பலி

0
81
Article Top Ad

லெபனானின் தெற்கு பகுதியில் திங்களன்று (08) இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் சிரேஷ்ட தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த தகவலை நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ரத்வான் படையின் துணைத் தலைவர் விஸ்ஸாம் அல்-தவிலே இந்த தாக்குதலில் உயிரிழந்தவர் என பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

லெபனான் கிராமமான மஜ்தால் செல்ம் மீது இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறித்த ஹெஸ்பொல்லா உயர் அதிகாரியும் மற்றுமோர் போராளியும் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேலியப் பகுதி மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்கள் தொடங்கியதில் இருந்து தெற்கு லெபனானில் இஸ்ரேலிய குண்டுவீச்சு 130 க்கும் மேற்பட்ட ஹெஸ்பொல்லா போராளிகளைக் கொன்றது.

சிரியாவில் மேலும் 19 பேர் கொல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.