இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகளுடன் பொங்கல் திருவிழா

0
105
Article Top Ad

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானைகளில் பொங்கல் பொங்கி,1500 பரத நாட்டிய கலைஞர்களின் பங்கேற்புடன,500 கோலங்கள் வரையப்பட்டு பொங்கலை வரவேற்கும் மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.

பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை கிழக்கு ஆளுநர் நடத்தியிருந்ததுடன், இலங்கையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுத்தமைக்காக உலகம் முழுவதும் இருந்து செந்தில் தொண்டமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில் மற்றுமொரு சிறப்பம்சமாக பொங்கலை வரவேற்கும் பொங்கல் திருவிழாவை நடத்தி தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.