மோடியை விமர்சித்த மாலைத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள்: இந்தியாவின் கடும் அதிருப்தியால் இடைக்காலத் தடை

0
63
Article Top Ad

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதற்காக மாலைத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாலைத்தீவின் மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

அரேபிய கடலில் உள்ள இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவுக்கு எதிரான கருத்துகளையே குறித்த மூன்று துணை அமைச்சர்களும் தமது “X“ தளத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மூவரும் பிரதமர் மோடியை “கோமாளி”, “பயங்கரவாதி” மற்றும் “இஸ்ரேலின் கைப்பாவை” என விமர்சித்துள்ளனர்.

மாலைத்தீவு அதிகாரிகளின் கருத்துக்கு பாலிவுட் நடிகர்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட சில இந்திய பிரபலங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து மாலைத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அந்நாட்டு அரசாங்கத்திடம் இந்த பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பியதன் பின்னரே இவ்வாறு இடைக்கால தடைவிதிக்கும் அறிவிப்பு வெளியானது.