தைவானில் இன்று ஜனாதிபதி தேர்தல்: உற்று நோக்கும் சர்வதேசம்

0
67
Article Top Ad

சீனாவினால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் இன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

எட்டாவது முறையாக இடம்பெறும் தேர்தலில் மும்முனை போட்டி இடம்பெறுகிறது.

இந்தத் தோ்தலில் டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்-ஜே ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

தற்போது நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் தைவானின் ஜனநாயகத்தைச் சோதித்துப் பார்க்கும் மிகப்பெரிய பரீட்சை என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தைவானின் மக்கள்தொகை 23 மில்லியனாகும். இதில் சுமார் 19 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இந்தத் தோ்தல் தைவானில் சீனாவின் எதிா்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் என்பதால் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தேர்தலாக பார்க்கப்படுகின்றது.