தமிழ் தேசியத்தை சீர்குலைக்கும் தலைவரை மக்கள் ஏற்கமாட்டார்கள்

0
62
Article Top Ad

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்

இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர்கள் குறித்து தனது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கான வேட்பாளர் தொடர்பில், கிழக்கு மாகாண மக்கள் எவ்வாறு தேசியத்தினை நேசித்து இருக்கின்றனர் என்ற விடயம் தெளிவாக வெளிப்படும்.

தமிழ் தேசியத்தினை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

கடந்த காலத்தில் தமிழ் மக்களின் முக்கிய பேச்சாளராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தமிழ் மக்கள் மீது வெளியிட்ட கருத்துக்கள் தேசியத்திற்கு ஏதிராக அமைந்திருந்தன.

இந்த தேர்தலில் நானும் ஒரு வேட்பாளர். இருப்பினும் எனது வாக்கினையும் அளிப்பேன். தமிழ் தேசியம் பாதுகாக்கும் வரை இறுதி வரை மக்களோடு இருப்பேன்.

வடமாகாண மக்களும் அதனை உணர்ந்து தமிழ் தேசியத்தினை வெற்றி பெறச்செய்யவேண்டும். தமிழ் தேசியத்தினை பாதுகாக்க பொருத்தமான தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம் மாத்திரமே.

சர்வதேச ரீதியில் புலம்பெயர்ந்த மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவரே எம்.ஏ.சுமந்திரன். எனவே சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது யாவரும் அறிந்தவிடயமே” என தெரிவித்தார்.