இலங்கை-இந்திய பயணிகள் படகு சேவை இந்த வாரம் மீளவும் ஆரம்பம்

0
58
Article Top Ad

தமிழகம் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய தெரிவித்தார்.

இதுவரை சேவையை ஆரம்பிக்க தேவையான ஆரம்ப வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், குடிவரவு அதிகாரிகள் ஏற்கனவே காங்கேசன்துறை துறைமுகத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

40 வருட இடைவெளிக்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான படகு சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இதன்போது ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எஸ்சிஐ)க்கு சொந்தமான அதிவேகப் படகான செரியபாணி சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த படகில் ஒரே நேரத்தில் 150 பேர் பயணம் செய்ய முடியம். நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பயணிக்க நான்கு மணி நேரம் ஆகும்.

ஒரு வழி பயணத்திற்கு 26,750 ரூபாவும் இரு வழி பயணத்திற்கு 53,500 ரூபாவும் கட்டணமாக அறிவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.