இந்தியாவுடன் இராஜதந்திர மோதல்: மாலைத்தீவு ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம், எதிர்க்கட்சிகள் அதிரடி நடவடிக்கை

0
54
Article Top Ad

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவுக்கு எதிராக அந் நாட்டு பிரதான எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP), பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளது.

இந்தியா போன்ற நட்பு நாடுகளுடன் மாலைத்தீவு அண்மைய காலமாக இராஜதந்திர மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந் நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக இந்த தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

பாராளுமன்றில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள மாலைத்தீவு ஜனநாயகக் கட்சி , ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க போதுமான கையெழுத்துக்களை சேகரித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து, ஒரு குற்றச்சாட்டுத் தீர்மானத்திற்கு போதுமான கையெழுத்துக்களை சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.