அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசித்து வந்த இந்திய மாணவரான எம்பிஏ பட்டதாரி விவேக் சைனி) என்பவர், ஸ்னாப்ஃபிங்கர் மற்றும் கிளீவ்லேண்ட் சாலையில் உள்ள செவ்ரான் ஃபுட் மார்ட்டில் உள்ள கடையில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்திய மாணவர் தங்கியிருந்த அறையில், மேலும் ஒரு சில நண்பர்களும் தங்கியிருந்தனர்.
அவர்களில் ஒருவரான 53 வயதுடைய ஜூலியன் பால்க்னர் என்பவர், இந்திய மாணவரிடம் போர்வை ஒன்று கேட்டுள்ளார். அதற்கு இந்திய மாணவர் தன்னிடம் போர்வை இல்லை என்று கூறினார். பின்னர் தன்னிடம் இருந்த ஒரு ஆடையை கொடுத்தார்.
இதற்குள் இந்திய மாணவரிடம் சண்டையிட்ட பால்க்னர், அவரை சுத்தியலால் தாக்கிக் கொன்றார்.
இதுகுறித்து தகவலறிந்த பொலிஸார் இந்திய மாணவரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில், இந்திய மாணவரின் முகம் மற்றும் தலையில் சுமார் 50 முறை சுத்தியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய ஃபாக்னர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.