சஜித்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை தாக்குதல்

0
62
Article Top Ad

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு மாநகர சபைக்கு அருகில் நீர்த் தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஐ.ம.ச. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.

இன்று (30) பிற்பகல் 1.30 மணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் “மாற்றத்தை நாடும் வருடம்-2024” எனும் தொனிப் பொருளின் கீழ் கொழும்பில் எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்திருந்தது.

பேரணி ஆரம்பிக்க முன்னதாக பேரணிக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றால் பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டன.

என்றாலும், நீதிமன்ற தடை உத்தரவுகளையும் மீறி பேரணி முன்னெடுக்கப்பட்டதால் பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை ஆர்ப்பாட்ட பேரணிக்கு மேற்கொண்டனர்.

இதனால் எஸ்.எம்.மரிகார் எம்.பி, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹமான் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.