இடைத்தேர்தல்களில் படுதோல்வி – பிரித்தானிய பிரதமருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

0
57
Article Top Ad

பிரித்தானியாவில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழில் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

வெலிங்பரோ மற்றும் கிங்ஸ்வுட் ஆகிய இடங்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. குறித்த இரண்டு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சியே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது.

பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தில் வெற்றிடமாகும் இடங்களை நிரப்புவதற்கே இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

உதாரணமாக, ஒரு எம்.பி., இறந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ அல்லது கடுமையான கிரிமினல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாலோ, புதிய எம்பியை தேர்வு செய்ய இடைத்தேர்தல் நடத்தலாம்.

ஆனால்,நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது அரசியல் கட்சியை மாறினால் இடைத்தேர்தல் நடைபெறாது. தேர்தலுக்கு முந்தைய காலக்கட்டத்தில், அந்த இடம் வெற்றிடமாக இருக்கும் பட்சத்தில் அதற்கு அண்மித்த தொகுதியில் இருப்பவர் குறித்த தொகுதியை கவனிப்பார்.

வெலிங்பரோ மற்றும் கிங்ஸ்வூட்க்கான இடைத்தேர்தல்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்தமை காரணமாகவும், மறுசீரமைப்பு மனுவின் விளைவாக ஏற்பட்ட வெற்றிடம் காரணமாகவும் இடம்பெற்றது.

இரண்டு இடைத்தேர்தல்களிலும் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்த இரண்டு இடைத் தேர்தல்களும் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கின் சரிவைக் காட்டுகிறது.

ரிஷி சுனக்கின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இடைத்தேர்தல் முடிவுகள் இதில் தாக்கம் செலுத்தாது என கன்சர்வேட்டிவ் கட்சி தெரிவித்துள்ளது.