மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘‘மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி விவகாரங்களில் இலங்கை உரிய தர நிர்ணயங்களை எட்டத் தவறியுள்ளது.
பொறுப்புக்கூறல் விவகாரங்களில் நிலவி வரும் குறைபாடுகள் காரணமாக நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமூக நீதி தொடர்பில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதுடன், மனித உரிமைகள் குறித்த சர்வதேச அவதானத்தை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கிறது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரணில் அரசாங்கம் விமர்சனங்களை அடக்கவும், அடக்குமுறை சட்டங்களை அறிமுகம் செய்யவும் முயற்சிக்கிறது.‘‘ எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் ஊடாக டிஜிட்டல் ஊடகத்துறையை முழுமையாக கட்டுப்படுத்த அரசாங்கம் முற்படுவதாக உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள் குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் பின்புலத்திலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.