Article Top Ad
ஹமாஸ் அமைப்பை தடை செய்வதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்குப் பல நாட்களுக்குப் பிறகு, ஹமாஸ் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக சுவிட்சர்லாந்து பட்டியலிட்டது.
ஹமாஸ் மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களுக்கு பொருந்தும்
சுவிஸ் அரசின் இந்த புதிய முடிவு ஹமாஸ் மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களுக்கு பொருந்தும்.
குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நிதி நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அதிகாரிகளுடன் தகவல்களைப் பகிர்வதற்கான கட்டுப்பாடுகளையும் இது தளர்த்தும்.
20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
ஹமாஸுக்கு ஆதரவான செயல்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளது. தடை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனால் நீடிக்கப்படலாம்.