நேட்டோ அமைப்பின் அடுத்த பொதுச் செயலாளர் நெதர்லாந்து பிரதமர்

0
48
Article Top Ad

நேட்டோ அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டன்பேர்க் (Jens Stoltenberg) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலக உள்ள நிலையில், அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு பல நாடுகள் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவிடம் (Mark Rutte) கோரிக்கை விடுத்துள்ளன.

இதனடிப்படையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் உக்கிரமடையும் நிலையில், கூட்டணிக்கான முக்கியமான சநதர்ப்பத்தில் ருட்டேவுக்கு நேட்டை அமைப்பின் பொறுப்பை ஏற்க நேரிடும் என்பதுடன் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும் வழங்கப்படும்.

நெதர்லாந்தின் நீண்டகால பிரதமரான மார்க் ருட்டே, தனது பதவிக்காலத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட அந்நாட்டின் தலைவர்கள், பிரித்தானியா,ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளின் தலைவர்களுடன் நல்ல உறவுகளை பேணி வந்துள்ளார்.

பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போராட ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ
மார்க் ருட்டேவை தவிர எஸ்தோனிய பிரதமர் Kaja Kalas மற்றும் லத்வியாவின் வெளிவிவகார அமைச்சர் Krisjanis Karins ஆகியோரின் பெயர்களும் நேட்டோ அமைப்பின் செயலாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எனினும் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் பலமிக்க நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ்,ஜேர்மனி உட்பட அந்த அமைப்பின் 16 நாடுகள் மார்க் ருட்டோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர், உறுப்பு நாடகளின் இணக்கத்தின் அடிப்படையில் நியமிக்கப்படுவதுடன் அமைப்பில் அங்கம் வகிக்கும் 31 நாடுகளும் இறுதியாக எடுக்கும் தீர்மானத்திற்கு இணங்க வேண்டும். நேட்டோ அமைப்பின் 32 வது உறுப்பு நாடாக சுவீடன் இணையவுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலகும் Jones Stoltenberg நோர்வே நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்பதுடன் அவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த ஜுலை மாதம் நான்காவது முறையாக அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டது.

நேட்டோ அமைப்பு என்பது பனிப்போர் காலத்தில் அன்றைய சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போராடுவதற்காக கடந்த 1949 ஆம் ஆண்டு வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஆரம்பித்த அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும்.