இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு ஆதரவு இல்லை: சுவிஸ்லாந்து அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

0
46
Article Top Ad

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக கொண்டுவர எத்தனித்துள்ள உண்மை, ஐக்கியம்,நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சுவிஸ்லாந்து தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

இதுவரை காலமும் இலங்கையில் ஆட்சியாளர்கள் நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை எனவும், புதிய ஆணைக்குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என சுவிஸ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் சட்டவாட்சி, மனித உரிமை, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல்கைதிகளின் நலன் தொடர்பில் செயற்படும் அமைப்புக்களுடன் சுவிஸ்லாந்து இணைந்து பணியாற்றிவருகின்றது. மேலும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இலங்கை ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமையினை கட்டியேழுப்புவதில் காட்டிவரும் அசமந்த போக்கு காரணமாக சுவிஸ் அரசாங்கம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.