முதல் நபராக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நடிகர் விஜய்

0
118
Article Top Ad

நடிகர் விஜய் என்பதை தாண்டி இப்போது அரசியல்வாதியாக களமிறங்கியுள்ளார்.

எப்படி சினிமாவில் பல தடைகளை உடைத்து முன்னணி நாயகனாக, பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்டு சாதித்தாரோ அதேபோல் அரசியலிலும் அவரது ராஜ்ஜியம் நடக்கும் என்பது அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

முதலில் தனது கட்சி பெயர் தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார் கூடவே ஒரு சோகமான செய்தியையும் அவர் கூறியிருந்தார். இப்போது நடிக்கும் படம் மற்றும் இன்னொரு படம் நடித்துவிட்டு மொத்தமாக அரசியலில் இறங்குவேன் என்று கூறியது தான்.

கட்சி பெயர் அறிவித்த பிறகு வேறு எந்த தகவலும் வராமல் இருந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது கட்சிக்காக ஒரு செயலி உருவாக்கியுள்ளார். அதோடு அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆளாக இணைந்துள்ளார்.