கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் மாகாணத்தில் கைதிகளின் எண்ணிகையில் பாரிய அதிகரிப்பு: புதிய சிறைகளை அமைக்க முடிவு

0
67
Article Top Ad

தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து அதிகமாக வாழும் நாடுகளில் கனடா பிரதானமான நாடு.

இங்கு ஒன்றாரியோ (ontario) மாகாணத்தில்தான் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர்.

ஆனால், அண்மைக்காலமாக இந்த மாகாணத்தில் சில சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு முக்கிய அறிவிப்பை மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) வெளியிட்டுள்ளார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சிறைச்சாலைகள் உருவாக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.

ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுவது அதிகரித்து வருவதால் இவற்றில் சனநெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே கூடுதல் சிறைச்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டக் ஃபோர்ட் தெரிவிக்கிறார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் குற்றவாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குற்றவாளிகளை நீண்ட காலத்திற்கு சிறையில் தடுத்து வைப்பதற்கு தேவையான வசதிகள் இல்லாமையின் காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் டக் ஃபோர்ட் கூறுகிறார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த 2023ம் ஆண்டில் சிறைச்சாலைகளின் மொத்த கொள்ளளவு 7848 என்ற போதிலும், 8889 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.