திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதலமைச்சர்

0
100
Article Top Ad

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடிக் குற்றச்சாட்டில் அமுலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றில் உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி அவர் மத்திய அமுலாக்கத்துறையின் 12 பேர் கொண்ட குழுவால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் கடந்த 28 ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டடிருந்தது.

28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் ஏப்ரல முதலாம் திகதி வரை விளக்கமறியலில் கைக்க உத்தவிரப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கெஜ்ரிவாலின் சிறை வாழ்க்கை எப்படியிருக்கும்?

ஏனையக் கைதிகளைப் போலவே, கெஜ்ரிவால் காலை 6:30 மணியளவில் எழுந்திருக்க வேண்டும்.

பின்னர் கைதிகளுக்கு காலை 6:40 மணியளவில் தேநீர் மற்றும் ரொட்டி என்பன காலை உணவாக வழங்கப்படுகின்றன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

காலையில் குளித்த பிறகு, சிறையில் இருந்து அரசாங்கத்தை இயக்கும் கெஜ்ரிவால், விசாரணை நடத்தினால் அல்லது அவரது சட்டத்தரணிகளை சந்திக்க முடிவுசெய்தால் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

காலை 11 மணிக்கு மதிய உணவு வழங்கப்படும். மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறைக்கைதிகளுடன் தங்கியிருக்க வேண்டும்.

மற்ற கைதிகளைப் போலவே பிற்பகல் 3:30 மணிக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படும், மேலும் மாலை 4 மணிக்கு சட்டத்தரணிகளுடன் சந்திப்பை நடத்தலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னர், இரவு உணவு வழங்கப்படும். மேலும் கைதிகள் இறுதியாக இரவு 7 மணியளவில் அவர்களின் சிறை அறைகளுக்குள் அடைக்கப்படுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

கைதிகள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை, உணவு போன்ற சிறை நடவடிக்கைகள் எதுவும் திட்டமிடப்படாத போது தொலைக்காட்சி பார்க்கலாம்.

செய்திகள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் 24 மணி நேரமும் மருத்துவ ஊழியர்கள் இருக்கிறார்கள்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், சிறையில் இருக்கும் காலக்கட்டத்தில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வார்.

உடல்நலக்குறைவு காரணமாக அவரது சட்டத்தரணிகள் உணவுக் கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளனர். டெல்லி முதல்வர் வாரத்திற்கு இரண்டு முறை தனது குடும்பத்தினரை சந்திக்கலாம்.

முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே சந்திக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகார் சிறையில் கெஜ்ரிவால் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்?

கெஜ்ரிவால் திகார் சிறை எண் 2 இல் அடைக்கப்பட உள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிறை எண் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நகர சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறை எண் ஏழில் உள்ளார்.

பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கே.கவிதா தற்போது பெண்கள் பிரிவில் உள்ள சிறை எண் ஆறில் அடைக்கப்பட்டுள்ளார்.