அமெரிக்காவில் படுகொலை செய்யப்படும் இந்திய மாணவர்கள்

0
66
Article Top Ad

கடந்த மாதம் காணாமல் போன இந்திய மாணவர் முகமது அப்துல் அர்பாத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உயிரிழந்துவிட்டதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக இந்திய தூதரகம் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இன்று அறிவித்துள்ளது.

இந்த மாணவன் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எக்ஸ் பக்கத்தில்,

“முகமது அப்துல் அர்பத்தின் மரணம் தொடர்பாக முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக அமெரிக்க பொலிஸாருடன் ஆலோசித்து வருகின்றோம்.

அர்பத்தின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல, அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என தனது இரங்கலை பதிவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மே மாதம் மேல் படிப்பிற்காக குறித்த மாணவன் அமெரிக்காவுக்குச் சென்ற நிலையில் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து மார்ச் 19 அன்று, அர்பத்தின் குடும்பத்தை தொடர்பு கொண்ட அடையாளந்ததெரியாத நபர்கள் சிலர்,

“அர்பத் கடத்தப்பட்டுள்ளார்.விடுவிக்க வேண்டும் என்றால், $1,200 பணம் வேண்டும் என்றும்.அவ்வாறு பணம் கிடைக்காத பட்சத்தில்

அர்பத்தின் சிறுநீரகத்தை விற்றுவிடுவோம்” என அச்சுறுத்தியதாக குறித்த மாணவனின் தந்தை உறுதிப்படுத்தியிருந்தார்.

கடந்த வாரம், ஓஹியோவில் உமா சத்ய சாய் காடே என்ற இந்திய மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்குள் அமெரிக்காவில் உயிரிழந்த இரண்டாவது இந்தியர் “முகமது அப்துல் அர்பத் என்ற 25 வயது மாணவன் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, 2024ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 11 இந்தியர்கள் சடலமாக அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இவ்வாறான சம்பவங்கள் உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பில் இந்திய அரசின் ஏற்பாடு என்ன? இந்திய மாணவர்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.