பலஸ்தீனியர்கள் தஞ்சம் புகுந்துள்ள காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலுக்கான நேரம் நிர்ணயகிப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் திகதி குறித்த எதுவித தகவல்களும் தற்போது வரை வெளியாகவில்லை.
குறித்த குடியிருப்பு பகுதியில் சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர் என்பதும் சுட்டிகாட்டத்தக்கது.
ஐநாவில் பலஸ்தீனத்திற்கு முழு உறுப்பு அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இம்மாதம் பரிசீலனை செய்யும் என ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடி தாக்குதல் பிராந்திய பினாமி படைகளால் நடத்தப்படலாம் என்று அமெரிக்க உளவுத்துறையை நன்கு அறிந்தவர்கள் CNN க்கு தெரிவித்தனர்.