உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுப்பிடிப்பேன்: சரத் பொன்சேகா உறுதி

0
176
Article Top Ad

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை நீதியோ தீர்வோ கிடைக்காத பட்சத்தில் தற்போது வரை பேசு பொருளாக மாத்திரமே காணப்படுகின்றது.

பல்வேறு தரப்பினரும் தத்தமது கருத்துக்களை ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “ வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவரை நிச்சயம் கண்டுப்பிடிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, உறுதியளித்துள்ளார்.

தலஹேன கட்சி அலுவலகத்தில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கருத்து தெரிவித்த அவர்

”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 05 வருடங்களாகின்றது. தாக்குதலுக்கு மூலகாரணமானவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கமைக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும்

அரச புலனாய்வுத் தகவல் அதிகாரிகளினால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட போதிலும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் அரச பாதுகாப்பு அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தண்டிக்கப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.