ஹர்திக் பாண்டியாவின் மோசமான தலைமைத்துவத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 பிளேஆஃப் சுற்றுக்குள் நுழையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
நேற்று ஜெய்ப்பூரில் நடந்த 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் மும்பாய் அணி தோல்வியுற்றது. இதனால் புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது மும்பாய்.
மும்பாய் அணியின் தலைமை பதவியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றமே இந்த தோல்விகளுக்கு காரணமென முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அந்த அணியின் நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த பருகாலத்தக்கான தலைவராக செயல்படும் ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சிரேஷ்ட வீரர்களை மதிக்காது மைதானத்தில் தன்னிச்சையாக செயல்படுவதாக முதல் போட்டி முதலே இவர்மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேற்றைய தோல்வியின் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கு இம்முறை மும்பாய் செல்வது கடினமாகவிட்டதென முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறினார்.
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவை ஹர்திக் பயன்படுத்திய விதத்தை திவாரி கடுமையாக சாடியுள்ளார்.
மேலும், ஹர்திக் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் எந்தவொரு தாக்கத்தை இந்தப் பருவக்காலத்தில் ஏற்படுத்தவில்லை. அவர் ஒரு சில இன்னிங்ஸ்களைத் தவிர, பெரும்பாலான இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாட போராடி வருகிறார். அதே நேரத்தில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் என்றும் திவாரி விமர்சித்துள்ளார்.
பலம் வாய்ந்த மும்பாய் அணியின் கனவுகளை ஹர்திக் பாண்டிய இம்முறை சுக்குநூறாக்கியுள்ளதாக ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.