அமெரிக்காவில் டிக்டாக்கை (TikTok) தடைசெய்யும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்துக்கு அமெரிக்க செனட் சபை (நாடாளுமன்ற மேலவை) ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டத்தின் ஊடாக TikTok இன் சீன உரிமையாளரான ByteDance க்கு அதன் அமெரிக்க பங்குகளை விற்பனை செய்ய ஒன்பது மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிமை நிறுவனம் இணங்காவிட்டால் அமெரிக்காவில் பயன்பாடு முற்றாக தடைசெய்யப்படும்.
சட்டமூலம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கையெழுத்திடுவதற்கான அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
டிக்டாக்கை விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்படும் அமெரிக்காவின் எந்தவொரு முயற்சியையும் எதிர்ப்பதாக சீனாவின் ByteDance நிறுவனம் கூறியுள்ளது.
எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் சீன அதிகாரிகளின் ஒப்புதல் தேவைப்படும். இதனால் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பெய்ஜிங் எதிர்ப்பதாக கூறியுள்ளது.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டாலும் இந்த செயல்முறை உடனடியாக நடைமுறைக்கு வராதென அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டத்துக்கு 79 செனட்டர்கள் ஆதரவாகவும் 18 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தைத் தாய் நிறுவனமாகக் கொண்ட டிக்டாக் அமெரிக்காவில் நிறையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், டிக் டாக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் கொடுக்கிறது என கலிஃபோர்னியாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் பயனாளர்களின் அனுமதியின்றி இந்த நிறுவனம் இரகசியமாகத் தகவல்களை எடுக்கிறது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.