ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியை ஏற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.
தமது கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகிவிட்டு, கட்சி உறுப்புரிமையில் இருந்துகூட விலகாமல், மற்றுமொரு கட்சியில் பதவியை ஏற்றமை குறித்தே அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று மொட்டுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விவகாரம் கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், விஜயதாஸ ராஜபக்ஷ அழைக்கப்பட்டு இது தொடர்பில் விளக்கம் கோரப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.