அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்க சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக பொலிஸார் மற்றும் பெண் பொலிஸார் தொடர்பில் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த நான்காம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் பயணித்த காரில் இருந்து கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் தனிப்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையில்லும் ஈடுபட்டிருந்தனர்.
அவருக்கு எதிராக வெவ்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
சவுக்கு சங்கருக்கு எதிரான ஏழு வழக்குகளில் மூன்று வழக்குகள் விசாரணையிலும், இரண்டு வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளன.