மக்கள் விரும்பினால் ஏனைய கட்சி உறுப்பினர்கள் இணைக்கப்படுவர்

0
80
Article Top Ad

தேசிய மக்கள் சக்தியில் இணைய ஆர்வமுள்ள ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ,பொது மக்கள் ஏற்றுக் கொள்வதாக ஏதேனும் சமிக்ஞைகள் கிடைத்தால் மாத்திரம் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சிங்கள வார இதழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்ளப்படுவார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி என்பது அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்ட மக்கள் தெரிவு என்பதால் ஏனைய கட்சி உறுப்பினர்கள் எங்களுடன் இணைய பொது மக்களின் விருப்பம் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது கட்சிச் சின்னமான திசைக்காட்டியைச் சுற்றி மேலும் அரசியல் பலங்களை இணைத்துக்கொள்வதற்கான ஒரு முயற்சி என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

மேலும், ஆரம்பத்தில் ஜேவிபி என்பது ஜாடிக்கு ஏற்ற விதத்தில் மூடியாக மாறும் கொள்கையை எதிர்த்தவர்கள் எனினும் தற்போது அனுர உள்ளிட்ட குழு அவ்வாறு மூடியாக மாறுவதை ஆதரிப்பவர்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.