யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

0
103
Article Top Ad

தமிழினப் படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று வழங்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக விஞ்ஞான பீட நுழைவாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் மக்கள் துன்பப்பட்டு, வறுமைப்பட்டு, உணவு இல்லாமல் தவித்தனர். எத்தனையோ சிறுவர்கள், பெரியவர்கள் சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளானார்கள். வலிகள் நிறைந்த அந்த நேரத்தில் கஞ்சிதான் இலட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காத்தது என்ற அடிப்படையில் அந்த நினைவைக் கடத்தும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.