ஆட்டங்கண்ட விமானத்தில் இருந்த 20 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில்…

0
49
Article Top Ad

பேங்காக்: லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த எஸ்கியூ321 விமானம் செவ்வாய்க்கிழமை (மே 21) கடுமையாக ஆட்டங்கண்ட சம்பவத்தில் காயமுற்றவர்களில் 20 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பேங்காக் மருத்துவமனை புதன்கிழமை (மே 22) தெரிவித்தது.

அந்த 20 பேரில் இருவர் சிங்கப்பூரர்கள். எஞ்சியவர்கள் ஆஸ்திரேலியா, பிரிட்டன், மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

சிகிச்சை பெற்றவர்களில் 27 பேர் மருத்துவமனையிலிருந்து வசிப்பிடம் திரும்பியதாக சாமித்திவேஜ் ஸ்ரீநாகரின் மருத்துவமனை தெரிவித்தது. மேலும் 38 பேருக்கு அந்த மருத்துவமனையிலும் சாமித்திவேஜ் சுகும்வித் மற்றும் பேங்காக் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒன்பது பேருக்கு சாமித்திவேஜ் ஸ்ரீநாகரினில் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அந்த மருத்துவமனை தெரிவித்தது. மேலும் ஐவருக்கு புதன்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருந்தது.

இந்நிலையில், காயமடைந்தவர்களைக் கொண்டுவந்து சேர்ப்பதில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்தும் அரசாங்க, தனியார் அமைப்புகளுக்கும் அந்த மருத்துவமனை நன்றி தெரிவித்துக்கொண்டது.

மருத்துவமனையின் வரவேற்புப் பகுதியில் புதன்கிழமை 20க்கும் மேற்பட்ட தாய்லாந்து, வெளிநாட்டு செய்தியாளர்கள் முகாமிட்டு இருந்தனர்.