ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் பலருக்கு தொடர்பு?: அவசர விசாரணைகள் முன்னெடுப்பு

0
101
Article Top Ad

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இந்நாட்டில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அவசர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வெசாக் திருவிழாவில் இன்று (26) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்தார்.

இந்த நாட்டிலிருந்து அகமதாபாத் நகருக்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்த ஆயத்தங்களுடன் வந்த இலங்கை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வரை இந்திய பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.