உக்ரைன் மீதான போருக்கு முடிவு கட்டும் வகையில், தாம் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குத் தயார் என்று புட்டின் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், நேட்டோ நாடுகள் உக்ரைன் விடையத்தில் தலையிடாமல் இருந்தால், இந்த யுத்த நிறுத்தம் சாத்தியம் என்று புட்டின் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவை பொறுத்தவரை, இந்தப் போர் அவர்களுக்கு பெரும் வெற்றி தான். காரணம் உக்ரைன் நாட்டின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
அதனை அப்படியே தக்க வைக்க இந்த யுத்த நிறுத்த, நாடகத்தை புட்டின் அரங்கேற்ற நினைக்கிறாரா என்பது தெரியவில்லை. ரஷ்யா பல ஆயிரம் ராணுவத்தையும் பல தளபாடங்களையும் இந்த யுத்தத்தில் இழந்துள்ளது. இன் நிலையில் தம்மை மேலும் பலப்படுத்த கால அவகாசம் தேவை.
இந்த நிலையில், இப்படி ஒரு நகர்வை புட்டின் மேற்கொண்டு இருக்கலாம் என்று அமெரிக்கா கருதுகிறது.
எது எவ்வாறு இருப்பினும், ரஷ்யா தற்போது தெரிவித்துள்ள கருத்தை உக்ரைன் அதிபர் ஏற்றுகொள்ள வேண்டும். அப்படி என்றாலே இது நடைமுறைக்குச் சாத்தியம் ஆகும். இதுபோலவே 2014ல் உக்ரைன் நாட்டின் கிரீமியா என்ற பெரும் பகுதியை, ரஷ்யா திடீரென ஆக்கிரமித்துக்கொண்டது.
அதுபோல அதன் பின்னர் தற்போது படை எடுத்து பல நகரங்களை கைப்பற்றியும் உள்ளது. இது மீண்டும் நடக்காது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை. அதனால் உக்ரைன் நன்றாக பரிசீலனை செய்து தான் ஒரு முடிவை எட்டும் என்று எதிர்வு கூறப்படுகிறது.