யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்து: கனடா செல்ல காத்திருந்த இளைஞர் பலி

0
169
Article Top Ad

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நாளைய தினம் கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் வடக்கு உள்ளிட்ட நாடு முழுவதும் அதிக வேகம் காரணமாக நூற்றுக்கணக்கான விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் பலர் கொல்லப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.