“புதிய கூட்டணி அமைத்து இரண்டே நாட்கள்”: மௌபிம ஜனதா கட்சியிலிருந்து விலகினார் சரத் அமுனுகம

0
55
Article Top Ad

பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினரான கலாநிதி சரத் அமுனுகம கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தான் பதவி விலகுவதற்கான தீர்மானத்தை கலாநிதி சரத் அமுனுகம கட்சித் தலைவர் திலித் ஜயவீரவிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் பதவி விலகியதற்கான சரியான காரணம் தெரியவில்லை.

கடந்த திங்கட்கிழமை, திலித்ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இணைந்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கியிருந்தனர்.

மௌபிம ஜனதா கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளும் புத்திஜீவி குழுக்களும் இணைந்து ‘சர்வஜன பலய’ என்ற புதிய அரசியல் கூட்டணியை தொடங்குவதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

“நமது நாடு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், ‘சர்வஜன பலய’ என்ற கூட்டணியில் ஒன்றிணைவோர், விமர்சனங்களுக்கு அப்பால் சென்று தீர்வுகளைக் காண்பதற்கும், வெற்று வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்ட மூலோபாயத் திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம்,” என்று திலித் ஜயவீர தெரிவித்திருந்தார்.