நீரிழிவு நோயாளருக்கான புதிய மருந்து: சீன ஆராய்ச்சியாளர்களின் சாதனை

0
51
Article Top Ad

நீரிழிவு நோய்க்கு எதிரான புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு குறித்த மருந்தை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த புதிய தீர்வு பெரும் உதவியாக இருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் இன்சுலின் ஊசிக்கு பதிலாக, கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் போன்ற செல்கள் செயற்கையாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன.

இந்த முறையைப் பயன்படுத்தி பல மருத்துவ ஆய்வுகள் நடத்தப்பட்டு, இந்த புதிய முறை வெற்றியடைந்துள்ளதாகவும், நோயாளிகளின் நீரிழிவு பிரச்சினை நீங்கியதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.