தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பம்: ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணைக்குழு

0
30
Article Top Ad

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை மாநில கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

குறித்த கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கடந்த பெப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணைக்குழு அதனை பதிவு செய்யாமல் நிலுவையில் வைத்தது.

இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலாளராக கடலூர் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலாளராக வேலூர் தாஹீரா ஆகியோரை விஜய் நியமித்தார்.

மேற்குறித்த கட்சி விபரங்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, அதனை தேர்தல் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் கட்சி தொடர்பில் ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் அதனை எதிர்வரும் 11ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கால அவகாசம் விதித்துள்ளது.

அப்படி எதுவித ஆட்சேபனைகளும் வராத பட்சத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து இம் மாத இறுதிக்குள் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.