IND vs PAK ; நேருக்கு நேர் மோதும் இந்தியா – பாகிஸ்தான்: கர்ஜிக்கவேண்டிய வேளை நெருங்கிவிட்டது! களத்தில் இறங்கிய கமல்

0
26
Article Top Ad

டி20 உலகக்கோப்பை 2024இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று நியூயார்க்கில் உள்ள சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது.

இந்த போட்டி சரியாக இந்திய நேரப்படி இரவு 7.52 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், “ வணக்கம் இந்தியா, தேசத்திற்காக கர்ஜிக்கவேண்டிய வேளை நெருங்கிவிட்டது.

எல்லைகள் கடந்து இந்தியர்களாக வீறு கொள்வோம். ஒவ்வொரு போட்டியிலும் நாட்டிற்கான நமது ஆர்ப்பரிப்பு தீரம் மிக்க நமது வீரர்களின் நெஞ்சில் புரட்சிப் பாடலாக ஒலிக்கட்டும்.

7.52 மணிக்கு இந்தியாவுடன் ஒன்றாக நிற்போம். இந்தியன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகின்றது.