ரஷ்ய இராணுவத்திற்கு இனி இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்வதில்லை: எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல்

0
56
Article Top Ad

இலங்கையிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு இனிமேல் ஆட்சேர்ப்பு செய்வதில்லை என ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி விடுத்த கோரிக்கைக்கு இணங்க இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் நாடுகளுடனான இடம்பெற்று வரும் 2024 பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் அமர்வில் பங்கேற்கும் நோக்கில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யா சென்றுள்ளார்.

நேற்று (10) அலி சப்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சந்தித்து இருவருக்கும் இடையே இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

இதேவேளை, இந்த சந்திப்பில் சுற்றுலா,உயர்கல்வி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேலும் மேமபடுத்த இருதரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை இராணுவ வீரர்கள் ரஷ்ய ஆயதப் படைகளில் இணைவது தொடர்பில் அமைச்சர்கள் இருவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் ரஷ்யாவில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ரஷ்ய வெளிவிவகார அமைச்சரிடம் அலி சப்ரி உதவி கோரியிருந்தார்.

இதேவேளை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இலங்கையின் உயர் மட்ட குழுவினர் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் ஜூன் மாதம் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, எதிர்வரும் கூட்டத்தில் இந்த விவகாரங்கள் தொடர்பில் விரிவாக பரிசீலனை செய்யப்பட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க உடன்பதடு எட்டப்பட்டுள்ளது.