இலங்கை – நேபாளம் ஆட்டம் கைவிடப்பட்டது – சூப்பர் எட்டு சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் இலங்கை

0
51
Article Top Ad

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் மோதவிருந்தப் போட்டி மழை காரணமாக அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டுள்ளது.

ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண தொடரில் தங்கள் முதல் போட்டியை நடத்தவிருந்த புளோரிடாவின் லாடர்ஹில் நகரில் கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஓவர்கள் குறைக்கப்பட்டு அணிகள் களமிறங்கக்கூடும் என்ற நம்பிக்கையைத் தொடர்ந்து மழையில் நனைந்த மைதானத்தை சரிசெய்ய மைதான ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றினர்.

இப்போட்டி இலங்கை நேரப்படி காலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகவிருந்த போதிலும், போட்டியின் நாணய சுழற்சியில் ஈடுபடுவதற்கு கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக நடப்பு T20 உலகக் கிண்ணப் தொடரில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் இலங்கையின் நம்பிக்கை முடிவுக்குக் வந்துள்ளது.

தற்போது, ​​’டி’ பிரிவில் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று தரவரிசையில் முதலிடத்திலும், முறையே இரண்டு போட்டிகளில் பங்கேற்றுள்ள பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இலங்கை இதுவரை மூன்றுப் போட்டிகளில் பங்கெடுத்திருந்த நிலையில், இரண்டுப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதுடன், நேபாளத்திற்கு எதிரான இன்றையப் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் T20 உலகக் கிண்ண தொடரில் சூப்பர் எட்டு சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கடினமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.