தென்னாபிரிக்க ஜனாதிபதியாக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவு

0
47
Article Top Ad

தென்னாபிரிக்க ஜனாதிபதியாக மீண்டும் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 29 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் 30 வருடங்களின் பின்னர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் 40% வாக்குகளை பெற்று பெரும்பான்மையை இழந்தது.

மொத்தம் உள்ள 400 தொகுதிகளில், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பிரதான எதிர்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பில் சிறில் ரமபோசா 283 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜூலியஸ் மலேமா 44 வாக்குகளைப் பெற்றார்.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதில் சிக்கலை எதிர்கொண்டிருந்த ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தற்போது கூட்டணி அரசாங்கத்தை அமைத்தனூடாக

தற்போதைய ஜனாதிபதி சிரில் ரமபோசா இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக தேர்வு செய்யபட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் தனது ஆதிக்கத்தை இம்முறை தேர்தலில் இழந்தது.

இதனைத் தொடர்ந்து 18 கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளன.