நாளை இலங்கைக்கு வருகிறார் ஜெய்சங்கர் – பல தரப்பினருடனும் பேச்சு

0
55
Article Top Ad

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இலங்கை விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து இலங்கை தலைமைத்துவத்துடன் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இரு தரப்பு விஜயம் இதுவாகும்.

இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கையை மீள வலியுறுத்தும் இந்த விஜயமானது, கடல் மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலங்காலமாக நல்லுறவைக்கொண்ட நண்பனாகவும் உள்ள இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டுகின்றது.

அத்துடன், இணைப்புத் திட்டங்கள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பரஸ்பர நன்மையளிக்கும் ஏனைய ஒத்துழைப்புகள் ஆகியவற்றுக்கும் இந்த விஜயம் மேலும் உத்வேகமளிக்கும். – என்றுள்ளது.