ஜூலை 2 – சஜித்துக்கு தீர்மானமிக்க நாள்

0
39
Article Top Ad

இலங்கையை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பில் ஜூலை 2ஆம் திகதி நாடாளுமன்ற விவாதமொன்றை நடத்தி வாக்கெடுப்பு நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அந்த வாக்கெடுப்பின் போது, ரணில் விக்கரமசிங்கவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஒரு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவின் நூல் இன்று (28) வெளியிடப்படவுள்ள நிலையில், நிகழ்வின் பிரதம அதிதியாக ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.

நூல் வெளியீட்டுடன் ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையில் ஆரம்பித்து ஜூலை 2ஆம் திகதி வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைச்சர்கள் உள்ளிட்ட இதுவரையில் மொட்டுக்கட்சியில் ராஜபக்சர்களுக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலரை இணைத்துக் கொள்ளும் வரையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாக்ககெடுப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.