ஜனாதிபதி வேட்பாளராகிறார் ஓஷல ஹேரத்

0
37
Article Top Ad

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் “புதிய சுதந்திர முன்னணி“ சார்பில் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்யும் சட்டத்தின் கீழ் ஓஷல ஹேரத் தமது ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கப்படுவார் என புதிய சுதந்திர முன்னணி அறிக்கையொன்றின் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

ஜூன் 13ஆம் திகதி நடைபெற்ற தனது செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புதிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

புதிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் கீழ் சுதந்திரமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தியதில் ஓஷல ஹேரத் பிரபல்யமாக அறியப்படுகின்றார்.

ஓஷல ஹேரத் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பிரித்தானிய குடியுரிமை காரணமாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.