ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கடூழிய சிறை தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

0
47
Article Top Ad

கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் கடையொன்றில் பணியாற்றிய இளைஞரை டிஃபென்டர் மூலம் கடத்தி நியாயமற்ற முறையில் அடைத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை அறிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட அமில பிரியங்கர தாக்கல் செய்திருந்த வழக்கை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை இன்று வழங்கியது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி தெமட்டகொடைக்கு கறுப்பு நிற டிஃபென்டர் ஜீப்பில் வந்த சிலர் தம்மை கடத்திச் சென்று தாக்கியதாக அமில பிரியங்கர குற்றஞ்சாட்டியிருந்தார்.

முன்னதாக, கடத்தலில் ஈடுபட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற 8 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.