மகிந்தவிற்கு எதிராக இரகசிய திட்டங்கள்: தலைமை தாங்குகிறார் ரணில்

0
45
Article Top Ad

மகிந்த ராஜபக்ச தலைமையிலான மொட்டுக் கட்சி அமைச்சர்களின் வாக்குகளால் தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க, தற்போது அதே மொட்டுக்கட்சி அமைச்சர்களைக் கொண்டு ராஜபக்ச தரப்பினருக்கு எதிராக பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

அதன் தீர்மானமிக்க நாளாக கடந்த 26ஆம் திகதி அமைந்திருந்தது.

”இதோ ஒரு நற்செய்தி” என்ற சுவரொட்டிகள் மூலம் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரச்சார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதனை ”இதோ ஒரு நற்செய்தி- மொட்டுக் கட்சியிலிருந்து ஒரு வேட்பாளர்” என மறுவிளக்கம் செய்யப்பட்டு ஒட்டபட்டிருந்த சுவரொட்டிகளின் கருத்துக்கு எதிராக மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் மூலம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மொட்டுக்கட்சியிலிருந்து வேட்பாளர் என்பது போலியான ஒரு சுவரொட்டி என மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்திருந்தனர்.

மொட்டுக் கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்தவில்லை எனவும் தங்களுடைய முழு ஆதரவையும் ரணிலுக்கே வழங்குவதாக அதன்போது எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

சாகல ரத்நாயக்க மூலம் கொள்ளுப்பிட்டியவில் ஆரம்பிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான காரியாலத்தில் நடந்த முதல் ஊடக சந்திப்பு அதுவாகும்.

எவ்வாறாயினும், 1977ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரெஜீ ரணதுங்கவின் வீட்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அடியாட்கள் சிலர் தீ வைத்திருந்ததை மறந்து பிரசன்ன ரணதுங்க ரணில் பக்கம் நிற்பது அரசியல் வட்டாரங்களில் வியப்பாகப் பேசப்பட்டு வருகிறது.