சுவிட்சர்லாந்தில் புரண்டோடும் வெள்ளம், ஆங்காங்கே மண்சரிவு: 4 பேர் பலி, இருவரைக் காணவில்லை

0
41
Article Top Ad

இயற்கை பேரிடர்களால் பல உயிர் பலிகளும் உடைமை சேதங்களும் ஏற்படுகின்றமை தொடர் கதையாகிவிட்டது.

அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் தெற்கு மேகியா பள்ளத்தாக்கு பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தின் காரணமாக மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த பேரிடரில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க பின் என்ற கிராமத்தில் 52 வயதுடைய நபர் ஒருவரைக் காணவில்லை என்ற செய்தியும் பரவ, இதுகுறித்த விசாரணையில் பொலிஸார் ஈடுபட்ட நிலையில், காணாமல் போனவர், சாஸ் – க்ரண்ட் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் லாவிஜாரா என்ற பகுதியில் ஒருவரும் வலாய்ஸ் கேன்டன் என்ற பகுதியில் ஒருவருமாக மொத்தம் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

அதேபோல் இத்தாலியிலும் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.