ரணில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரானால் ஜனாதிபதி வேட்பாளராக வாய்ப்புள்ளது

0
40
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வாரானால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது குறித்து கட்சி பரிசீலிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தமது கட்சி எந்தவொரு குறிப்பிடத்தக்கது தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் உரிய நேரத்தில் முன்வைக்கப்படுவார் எனவும், அந்த வேட்பாளர் தமது கட்சியின் மொட்டு சின்னத்தில் முன்வைக்கப்படுவார் எனவும் அவர் மேலுமபிதெரிவித்திள்ளார்.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக இருக்க முடியுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி எமது கட்சியில் இணைந்துகொண்டால் இந்த விடயம் தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனவும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.