அரசாங்கம் தந்திர வியூகம்: தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

0
27
Article Top Ad

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தமொன்றை கொண்டுவந்து சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார்.

”நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்த உயர்நீதிமன்றம் நிச்சயமாக உத்தரவிடும். அந்த நோக்கத்திற்காகவே, அமைச்சரவையில் புதிய திருத்தமொன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

பொது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்த நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெருத்பான்மையை அரசாங்கத்தால் பெற முடியாது. எதிர்க்கட்சி என்ற வகையில் அதனை எம்மால் அனுமதிக்க முடியாது.

இந்த முயற்சியை முறியடிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தமக்கு அதிகாரம் கிடைக்கும் 17ஆம் திகதியே ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

திகதியை அறிவிக்க தாமதமானால், அரசாங்கத்தின் தந்திர வியூகத்தின் வெற்றிக்கு தேவையான கால அவகாசம் கிடைக்கும்.” எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.